ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை செயற்படும்: எரிக் சொல்ஹெய்ம்!

Thursday, January 19th, 2017

ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவுடன் கூட்டுறவாக செயற்பட இலங்கை இணங்கியுள்ளதாக அதன் தற்போதைய தலைவரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (புதன்கிழமை) எரிக்சொல்ஹெய்மை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, சூழல் இயைவுப் பொருளாதாரம், வனஜீவராசிகள், குடிநீர், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய சுற்றுலாத்துறை உள்ளிட்ட விடயங்களில் ஐ.நா. சுற்றுச்சூழல் பிரிவுடன் இலங்கை இணைந்து செயற்படுமென பிரதமர் ரணில் தெரிவித்துள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எரிக்-சொல்ஹெய்ம்

Related posts:

4 பிரதான அம்சங்களுடன் 34 ஆவது அமர்வில் உள்ளக பொறிமுறை  விபர அறிக்கையை சமர்ப்பிக்கின்றது அரசாங்கம்!
சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு - கமத்தொழில் அமைச்சரின...
உணவு நஞ்சானது - ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி!