ஐ.நா.வின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!

Tuesday, August 8th, 2017

ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கைக்கான விஜயத்தை இந்த வருடம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான இரண்டு நிபுணர்கள் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம், பலவந்தமாக தடுத்து வைத்தல் மற்றும் தீவிரவாத முறியடிப்பு சட்டமூலத்தின் அமுலாக்கத்தின் போது மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது

ஏற்கனவே இந்த விடயங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளரும், ஐக்கிய நாடுகளின்அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப் பொதுச் செயலாளரும் கடந்த மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன - அமைச்சர் கலாநிதி...
நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகைய...
சர்வதேசம் இன்று பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. - நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என ந...