ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்று ஜெனிவா பயணம்!
Friday, February 25th, 2022ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதிமுதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்று ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
மேலும் இலங்கை குறித்த அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்தி்ற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கான பதிலளித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|