ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

அத்துடன் தமக்கு தெரிந்தளவில் இதுவரை வெளியுறவு அமைச்சு, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக குழு ஒன்றை நியமிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட காணொளி அதன் அடிப்படைகளுக்கு முரணானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது - அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் எ...
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் - இலங்கை பெற்றோலிய ...