ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு செல்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். இதற்கு முன்னதாக வெனிசூலாவில் செப்டம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 17வது அணிசேரா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
Related posts:
வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்!
அதிகாரம் வழங்கப்படவில்லை - தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் - பொது சுகாதார அதிகாரிகள்...
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
|
|