ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அனில் ஜாசிங்க நியமனம்!

Thursday, October 7th, 2021

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவாகியுள்ளார்.

கொரியா நாட்டின் சுவோன் நகரில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் அவர் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அனில் ஜாசிங்க அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அந்த கூட்ட தொடரில் பங்கேற்பார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 47 உறுப்பு நாடுகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் சுற்றாடல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ...
ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் - மக்களே அவதானம் என எச்சரி...
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை – பா...