ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்!

Thursday, July 18th, 2019

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் (Clqment Nyaletsossi Voule) 09 நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று(18) இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.

இவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: