ஐ.நா. சபை தலைமையகம் ஜூன் 30ஆம் திகதிவரை மூடப்படுகின்றது!

கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், ஜூன், 30ஆம் திகதிவரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஐ.நா.,வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச்சில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஐ.நா., தலைமை அலுவலகமும், மார்ச், 16ஆம் திகதி மூடப்பட்டது.
இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ‘வைரஸ் பரவல் காரணமாக, ஐ.நா., தலைமையகம், ஏப்ரல், 12ம் தேதி வரை மூடப்படுகிறது. ஊழியர்கள் அனைவரும், வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்’ என்றார்.ஆனால், அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததைஅடுத்து, தலைமை அலுவலகம், மே, 31 வரை மூடப்படுவதாக, ஐ.நா., அறிவித்தது.
ஆனால், கொரோனா பரவலில் இருந்து, அமெரிக்கா இன்னும் மீளவில்லை. மேலும், உலகில், பெரும்பாலானா நாடுகள், கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இதையடுத்து தலைமை அலுவலகம் மூடலை, ஜூன், 30 வரை, ஐ.நா., நீட்டித்துள்ளது.இந்நிலையில், அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வைரஸ்தொற்றால், உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் வெறுப்பை காட்டும் வகையிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தகவல்கள் பரப்பப்படுவது, கவலைஅளிக்கிறது.
பயங்கரவாத மற்றும் நிறவெறி அமைப்புகள், வைரசால் ஏற்பட்டுள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, மக்களிடம் ஒற்றுமை உணர்வை அழிக்க முயற்சிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, மத தலைவர்களுக்கு உள்ளது. மக்களிடம் ஒற்றுமையை அதிகரித்து, வைரஸ் ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|