ஐ.நா சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகின்றார்!

Wednesday, July 17th, 2019

ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் க்ளேமென்ட் யாலெட்சொசி வோல்வ் நாளை இலங்கைக்கு வரவுள்ளார்.

அவர் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து அமைதியான சுதந்திரம் மற்றும் இணைந்த நாடு தொடர்பான ஆராய்வில் ஈடுபடவுள்ளார்.

தமது விஜயத்துக்கு முன்னர் கருத்துரைத்துள்ள வோல்வ், இலங்கையில் வலுவான சுதந்திரமான அமைப்புக்கள் உள்ளன. அவற்றை நல்லிணக்கத்தை நோக்கி நகர்த்தி செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் தனது விஜயம் பொதுமக்களின் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது விஜயத்தின்போது வோல்வ் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என்ற பல இடங்களுக்கும் செல்லவுள்ளார்.

அத்துடன் அரசாங்கம், நீதி அமைப்புக்கள், ஊடகங்கள் என்று பல்வேறு பிரிவின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் தனது இலங்கைக்கான விஜயத்தின் அறிக்கையை வோல்வ், 2020ம் ஆண்டு 44வது மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்

Related posts: