ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் –
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையாகும்.
இந்த நிலையில், எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!
சபை அமர்வுகளை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. - காரணத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் முதல்வர்!
ஆயுத கடத்தல் - புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு!
|
|