ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

Saturday, July 8th, 2017

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ உறுதி செய்துள்ளார்.

மராவி நகரத்திற்குள் செயற்பட்ட பயங்கரவாதிகளை இலக்கு வைத்து பிலிப்பைன்ஸ் இராணுவத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மராவி நகரத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 329 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 225 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உறுதிப்படுத்தியதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெளிநாட்டு அதிகாரமிக்க இடமாக மராவி நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மராவியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை, சிரியா, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வந்து ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: