ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரித்தானிய “சன்” செய்தித்தாள் எச்சரிக்கை!

ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐ.எஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐ.எஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது ,சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது.
மொசாம்பிக்கின் வடபகுதியில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை சன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
கடல் கொந்தளிப்பாக காணப்படும்: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்களை ஆராய்ந்து அவற்றை பொதுமக்களின் நலன்கருதி நிறைவு செய்யுமாறு...
|
|