ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் – நிதியமைச்சர் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் அன்ரூ மக்டொவலுக்கும் நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் 50 மில்லியன் யூரோ நிதிக்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் மூலம் கொழும்பு மாநாகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதிபயன்படுத்தப்படவுள்ளதாக பெல்ஜியத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதே வேளை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களுக்கும் பசுமை எரிசக்திக்கான நடவடிக்கைதிட்டதிற்கும் பெல்ஜியம் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. டாவோஸில் நடைபெற்ற உலகப்பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை தூதுக்குழுவினரின் இந்த கோரிக்கைக்கு பெல்ஜிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. விரைவில் பெல்ஜியம் நாட்டின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக பெல்ஜியத்திலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|