ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார்.
இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் ஒன்றியத்தின் பிரதி செயலளார் நாயகத்தையும் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லக்ஷம்பேர்க் வர்த்தக சபையுடன் இராஜாங்க அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையில் வாத்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்ஷம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.
Related posts:
|
|