ஐரோப்பிய நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது!

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவது குறித்த இறுதி அனுமதி வழங்கப்படுவற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஐந்து நிபுணர்கள் இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய நிலைமையை ஆராயும் நோக்கில் பிரசல்சில் இருந்து வருகை தரவுள்ளனர்.
அடுத்த மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து 13 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள், இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் ஆய்வு அறிக்கை பின்னர் 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒன்று கூடலில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி இராஜினாமா!
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே...
பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னா...
|
|