ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
Saturday, August 21st, 2021கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது புதுப்பிக்கத்தக்க சக்தி வலு தொடர்பில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக நோர்வே தூதுவர் ஹில்ட்பேர்க் ஹன்சென் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கு ஒத்துழைப்பு நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டவுடன், துருக்கி நாட்டின் வியாபாரா கவுன்சில் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் ததெரிவித்திருந்த துருக்கி தூதுவர் ஆர். டெமெற் செகர்சியோக்லு, இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு தமது நாட்டில் உயர் மட்டத்தில் கேள்வி காணப்படுவதாகவும்,இதனை தொடர்ந்து மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கொரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் தைத்த ஆடைகள் பெருமளவில் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் ஆடை உற்பத்திகளுக்கு தமது நாட்டு சந்தையில் அதிகளவில் கேள்வி காணப்படுவதாகவும், சந்தை வாய்ப்பினை விரிவுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இத்தாலி தூதுவர் ரிற்றா ஜியுலியானா மனெலா உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இத்தாலி நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலாபிரயாணங்களை மேற்கொள்ள அதிகளவில் ஆர்வமாக உள்ளார்கள். ஆகவே இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது அவசியமாகும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இத்தாலி தூதுவர் ரிற்றா ஜியுலியானா மனெலா நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் இலங்கை ஒருமித்த வெளிவிவகார கொள்கைக்கு அமைய செயற்படும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையுடன் தொடர்புக்கொண்டு பல்துறை செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறித்து தான் மகிழழ்சிசயடைவதாகவும் நிதியமைச்சர் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
000
Related posts:
|
|