ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் – 581 மில்லியன் ரூபா செலவில் முல்லையில் 868 வீடுகள்!

Tuesday, April 10th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 868 வீடுகள் 581.56 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்படி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்படி இரண்டு பிரதேச செயலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு குறித்த வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 434 வீடுகள் 290.78 மில்லியன் ரூபா செலவிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 434 வீடுகள் 290.78 மில்லியன் ரூபா செலவிலும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 868 வீடுகள் 581.56 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts: