ஐரோப்பிய ஆணைக்குழுவால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோ உதவி!

இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக 38 மில்லியன் யூரோகளை வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக ஐரோப்பிய ஆணைக்குழுவின் சர்வதேச மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் மிமிகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அபிவிருத்தி துறையில் இலங்கையுடன் மிக நீண்டகால தொடர்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாகவும் யுத்ததாலும்,சுனாமியாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கி மீண்டும் கட்டியெழுப்புவது ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான நடவடிக்கையாகவெ இது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஊரடங்கு உத்தரவை மீறிய 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - உள்நாட்டு அலுவல்கள் அமை...
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!
|
|