ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது!

Sunday, July 10th, 2016

போலி இந்திய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த இளைஞர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து ஓமான் சென்று அங்கிருந்து துருக்கி ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சித்துள்ளனர். போலி இந்தியக் கடவுச்சீட்டுக்காக ஆயிரம் யூரோக்கள் வீதம் செலுத்துவதற்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துருக்கிய விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞர்களின் கடவுச்சீட்டு குறித்த சந்தேகம் காரணமாக கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: