ஐரோப்பாவையும் அச்றுசுத்தும் ஶ்ரீகொரோனா வைரஸ்!

Monday, February 24th, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய பேச்சு ஓரளவு தனிந்து வருகின்ற இந்த நேரத்தில், கொரோனா ஐரோப்பாவையும், ஆசியாவின் வேறு பிரதேசங்களையும் தாக்க ஆரம்பித்திருப்பதான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாகத் தாக்க ஆரம்பிததுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இத்தாலியில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பா, இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 44 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இத்தாலியின் Lombardy, Veneto, Emilia Romagna, Piedmont போன்ற பிராந்தியங்கள் மிக அதிகாமான பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேபோன்று தென் கொரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தென் கொரியாவில் இதுவரை 602 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும்

மார்ச் மாதாம் 9ம் திகதிவரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று தென் கொரிய கல்வி அமைச்சு இன்று அறிவித்துல் விடுத்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளான மற்றொரு வைத்தியர் இன்றைய தினம் மரணம் அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடமையாற்றிய

சயா சிசி என்ற 29 வயதான வைத்தியரே இவ்வாறு மரணமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

கடந்த வியாழக் கிமையும் வூகான் மாநிலத்தில் மற்றொரு வைத்தியர் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூகான் மாகானத்தில் மாத்திரம் இதுவரை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தப் போராடிய 3000 வைத்திய சேவை நிபுனர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது

Related posts: