ஐரோப்பாவின் அதிக சொகுசு கப்பல் இலங்கை வருகை!

marine-engineering Monday, March 20th, 2017

ஐரோப்பாவில் இருந்து எல்பட் ரோஸ் என்ற அதி சொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பல் சுற்றுலா பயணிகள் சிலரை ஏற்றிக் கொண்டு இலங்கையின் மாகம்புர துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளது.

கப்பலில் வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு துறைமுக அதிகார சபையினால் சிறப்பான வரவேற்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கதிர்காமம், யால, புந்தல உட்பட பல பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன் தினம் மியன்மாரில் இருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைத்தந்த கப்பல் நேற்று இரவு மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளது.

205 நீளத்தை கொண்ட இந்த கப்பலில் 503 மற்றும் 351 பேருடனான ஊழியர் குழுவுடன் இந்த கப்பல் வருகைத்தந்துள்ளது. நீண்டகாலத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு நாடு முழுவதும், சுற்றுலா பயணத்தில் ஈடுப்பட்டுள்ள இந்த கப்பல், டுபாய் வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புதிய பேருந்து கட்டணம் இன்று வெளிவரும்?
யாழ் மண்ணில் கால் பதித்தால் சொர்க்கம் நிச்சயம்  - இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன்!
வடக்கு மாகாணசபை தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது - அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ!
குப்பைகளை வீதிகளில் தீயிட்டால் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு!
இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை  - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!