ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

நாட்டின் ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிலஅளவையாளர் சங்கமும் எச்சரிக்கை!
குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
|
|