ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

Saturday, July 1st, 2017

காவற்துறை பொறுப்பில் இருந்த சந்தேகநபரொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 5 காவற்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மேல் நீதிமன்ற நீதவான் சரோஜினி குசலா வீரவர்தனவால் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இடம்பெற்று 27 வருடங்களுக்கு பிறகு குறித்த பிரதிவாதிகள் கடந்த 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த உத்தரவு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதவான் சரோஜினி குசலா வீரவர்தனவால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்டு உயிரிழந்த நபரின் உறவினர்களால் இது தொடர்பில் கடந்த 2006ம் ஆண்டு காவற்துறையில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.பாணந்துறை சிறப்பு குற்றவியல் பிரிவால் பண்டாரகம அடலுகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கொள்ளை சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.பின்னர் காவற்துறை காவலில் இருந்த போது குறித்த சந்தேகநபர் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.அவரின் உறவினர்களின் முறைப்பாட்டிற்கு அமைவாகவே நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Related posts: