ஐந்து நிமிடத்தில் சேவை : பதிவாளர் நாயகம்!

Monday, September 17th, 2018

நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இன்று(17) முதல் ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகம் இன்று(17) முதல் இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளுக்கு சான்றிதழ்களை விநியோகிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதேவேளை, 1960 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதிக்கான சான்றிதழ்களை ஐந்து நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 332 பிரதேச செயலகங்களில் 183 செயலகங்கள் இந்த சான்றிதழ்களை விநியோகித்து வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது


நாட்டில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் உதவி!
எதிர்கால நல்கருதி நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்- நிதி அமைச்சர்!
2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
புகையிரத சாரதிகள் நள்ளிரவிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில்!
யுத்தம் தொடர்பில் ஐ.நா தலையிட முடியாது - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!