ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய அமர்வில் உரையாற்றுகிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வழமைபோன்று பல எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (12) ஆரம்பமானது.
உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றன.
கடந்த ஆண்டு முழுவதும் கவனத்தை ஈர்த்த அனைத்து மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.
இதில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று பங்கேற்கவுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சரும் இன்று இந்த அமர்வில் உரையாற்ற உள்ளார்.
இதேவேளை, கூட்டத்தொடர் ஆரம்பத்தில், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|