ஐநாவின் உதவிப் பொதுச் செயலாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜீஎல் பீரிஸ் சந்திப்பு – கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, November 25th, 2021

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய பசுபிக் வலயத்திற்கான ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் காலிட் கையாரிக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில், ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், பயங்கரவாத தடைச்சட்ட திருத்த யோசனைகள், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக இதுவரையுள்ள கொள்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச்செயலாளருக்கு தெளிவுப்படுத்தியதாகவும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: