ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு!

Monday, October 11th, 2021

ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் பாரிய பிளவுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தகட்சிக்குள் கடும் கருத்துவேறுபாடுகள் உருவாகியுள்ளன அந்த கட்சி பல பிரிவுகளாக சிதறும் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச இரண்டுமுறை தோல்வியடைந்துள்ளார் அவரால் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு செல்லமுடியும் என அவரது ஆதரவாளர்கள் கருதவில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts: