ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இவ்வாறு தெரிவிததிருந்த வெளிவிவகார அமைச்சர், படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக அவர்களை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த செவ்வியின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: