ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த பிரதமர்!
Wednesday, June 7th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்திருப்பதாக இன்னர்சிட்டிபிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளரை சந்தித்தாக கூறப்பட்டுள்ளது
எனினும், இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லைஇதேவேளை, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும், அவரது உடல் நிலை இயல்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், இன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சமுத்திரவியல் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர், வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட நிலை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|