ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமனம்!

Friday, April 19th, 2024

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிபுணர் பிரதீப் குருகுலசூரிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன்னர், பிரதீப் குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார்.

இதேவேளை, அவர் 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்ததுடன், அதற்கு முன்னர் உலக வங்கியுடன் இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: