ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி இலங்கை வருகை!

Thursday, August 4th, 2016

பிரித்தானிய பெண்ணான இவர் இலங்கைக்குள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக சேவையாற்றும் சிரேஸ்ட அதிகாரி என்பது சுட்டிக்காட்டத்தக்கது. ஐக்கிய நாடுகளின் உயர் நிலை அதிகாரியான இவர்இ இலங்கையில் அமைந்துள்ள வதிவிட மற்றும்

வதிவிடமற்ற ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பிரதிநிதியாகவும் இலங்கையில் செயற்பட உள்ளார்.இலங்கையில் பதவியேற்கும் முன்னர் அவர் பனாமா டோகோ சூடான் உட்பட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளராகவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியாகவும் ஒரு பெண் என்ற வகையில் உனா மேக்குலியே முதன்முறையாக நியமனம் பெற்றுள்ளார்.

Related posts: