ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம்!

Wednesday, January 13th, 2021

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சித் தலைமையகத்தில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்மை குறிப்பிடத்தக்கது

Related posts: