‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Wednesday, June 19th, 2019

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

146 மீற்றர் நீளமும், 4,560 தொன் எடையும் கொண்ட ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பலில் 273 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

இந்தப் போர்க்கப்பலில் வந்துள்ள இந்திய கடற்படையினர் மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

Related posts: