ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்!

Wednesday, August 30th, 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது 80  ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

அஸ்வர் கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமாக இருந்தால், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னாள் அமைச்சர் அஸ்வரின் ஜனாசா தெஹிவளை பாதிய்யா மாவத்தை 4 ஆம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பிரேமதாசவின் இறப்புக்கு பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வந்த அஸ்வர், 2005 ஆம் ஆண்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொண்டதுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2014 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: