ஏற்றுமதியினை அதிகரிக்க விஷேட செயற்பாடு தேவை  – ஜனாதிபதி!

Wednesday, November 1st, 2017

நாட்டின் விவசாய உற்பத்திகளையும் அவற்றின் தரத்தையும் அதிகரித்து ஏற்றுமதியினை உயர்த்துவதற்கு வினைத்திறனான செயற்பாடொன்றின் தேவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி ஏர்ல் ரீஜன்ஸி ஹோட்டலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் 45ஆவது சர்வதேச மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் விவசாய பொருளாதாரம் பற்றிய வரலாற்றுத் தகவல்களுடன் நாட்டை மீண்டும் விவசாயப் பொருளாதாரத்தினை நோக்கிக் கொண்டு செல்வதில் மிளகு உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மிளகு உற்பத்தியாளர்களைப் பலப்படுத்தவும் அத்தொழிற்துறையினை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மீள் ஏற்றுமதியினால் கடந்தகாலத்தில் உள்நாட்டில் மிளகின் விலை வீழ்ச்சியடைந்தபோது அது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Related posts: