ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாகவும் நாளை யாழ். குடாநாட்டில் மின்தடை!

உயரழுத்த மற்றும் தாழழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்பிற்கு மேலதிகமாகவும் யாழ். நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(13) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆரியகுளம், அரசடி, மின்சார நிலைய வீதி, ஸ்ரான்லி வீதி, பலாலி வீதி, திருநெல்வேலிப் பிரதேசத்தின் ஒருபகுதி, திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோயிலடி, O.L.R பிரதேசம், வெலிங்டன் சந்தி, கஸ்தூரியார் வீதியின் ஒருபகுதி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி இலங்கை வங்கி, நொதேர்ண் தனியார் பிறைவேற் வைத்தியசாலை, பலாலி தம்ரோ, அவ்னோர் பிறைவேற் லிமிட்டெட், புகையிரத நிலையப் பிரதேசம், கிறீன் கிறாஸ் விடுதி, BCCAS ஞானம்ஸ் விடுதி, ஸ்ரான்லி வீதி மக்கள் வங்கி, NSR கட்டடத் தொகுதி, HNB வங்கி ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|