ஏறாவூரில் தாயும் மகளும் கொலை !

Sunday, September 11th, 2016

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அடித்துக்கொலைசெய்துவிட்டு சமையலறைக் கதவைத் திறந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சடலங்கள் (ஜனாஸாக்கள்)  வீட்டின் விறாந்தையில் காணப்பட்டன. சுவர்களில் இரத்தம் தோய்ந்துதிருந்தது.  குற்றப்புலனாய்வுப் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டபோதிலும் கொலையாளிகளின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் தாயும் மகளும் மாத்திரமே வாழ்ந்துவந்துள்ளனர். மகளின் கணவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்துவருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. குடும்ப உறவினர் காலையில் வந்து பார்த்தபோதே கொலைசெய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. ஏறாவூர்பொலிஸார் இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Untitled (1)

Related posts: