ஏமாற்று தலைமைகளை நிராகரித்து சரியான தலைமைகளை தெரிவுசெய்யுங்கள் – தோழர் கி .பி.

ஏமாற்று தலைமைகளை நிராகரித்து சரியான தலைமைகளை தெரிவு செய்வதனூடாகவே மக்கள் முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலை மன்னார் பகுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஒரு காலகட்டத்தில் யுத்தம் முனைப்புப் பெற்றிருந்த போதுதான் யாழ்ப்பாணத்திற்கு எமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக சென்றிருந்தோம்.
அந்தக் காலத்தில் மிகவும் நெருக்கடியான சவால்கள் நிறைந்ததான காலகட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறந்த தலைமைத்துவத்தினூடாக எமது மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கியுள்ளோம். அந்த சேவை இன்றும் தொடர்கின்றது.
கட்டாந் தரையாக இருந்த யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளடங்கிய வடபகுதியை எமக்குக் கிடைக்கப்பெற்ற சிறிய அளவிலான அரசியல் பலத்தைக் கொண்டு மக்களுக்கு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம்.
அந்தவகையில் இன்றும் எமது சேவைகளை விரிவு படுத்தவும் விரைவு படுத்தவும் நாம் மக்களின் ஆணையைக் கேட்டுநிற்கின்றோம்.
எமது மக்கள் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு ஏமாற்றுத் தலைமைகளை நிராகரித்து மக்களுக்கு சேவை செய்யும் சரியான அரசியல் தலைமையாக எம்மை தெரிவு செய்ய வேண்டும். அதற்கு காரணம் என்னவென்றால் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை நாம் எமது மக்களுக்காக சரியான முறையில் செயற்படுத்திக்காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நீங்கள் தருகின்ற வாக்குப் பலத்தினூடாகத்தான் எமது சேவைகளை நாம் ஆற்ற முடியும் எனவே கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது போன்ற ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டம் கிளியன் குடியிருப்பு பகுதியிலும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்து.
Related posts:
|
|