ஏப்ரல் 6ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமானநிலைய சேவைகள் ஆரம்பம்!
Tuesday, March 28th, 2017கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை நவீனமயப்படுத்தும் திட்டம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பூர்த்தி செய்யப்படுமென்று விமான நிலையத்தின் தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்துள்ளார்.
நவீனமயப்படுத்தும் நிர்மாணப் பணிகளில் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பணிகள் பூர்த்தியான பின்னர் ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் இந்த ஒடுபாதை சர்வதேச விமானங்களுக்காக திறக்கப்படுமென்று விதான பொறியியலாளர் விஜய விதான குறிப்பிட்டார்.
நாடொன்றின் நுழைவாயில் விமான நிலையமாகும். இதனால், உரிய தரத்துடன் அதனை முன்னெடுப்பது முக்கியமானதாகும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவிலும், இந்தியப் பிராந்தியத்திலும் சிறந்த விமான நிலையங்கள் மத்தியில் 5வது இடத்தை நெருங்கியிருப்பதாக பொறியியலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி ஆரம்பமான இந்த நவீனமயப்படுத்தல் நடவடிக்கை திட்டத்திற்காக 720 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மூவாயிரத்து 350 மீற்றர் நீளத்தையும், 15 மீற்றர் அகலத்தையும் கொண்டதாக சர்வதேச சிவில் விமான அமைப்பின் பரிந்துரைகளுக்கு அமைய ஓடுபாதை நவீனமயப் படுத்தப்பட்டுவருகிறது. சீன நிறுவனங்கள் இரண்டு நவீனமயப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் நடைபெற்றுவரும்
Related posts:
|
|