ஏப்ரல் 21 தாக்குதல் விவபாரம் – ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்!
Monday, September 26th, 2022ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் 35 – 1 வது பிரிவின் கீழ், ஜனாதிபதி பதவியை வகிக்கும் ஒருவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பராமரிக்க முடியாது.
இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க தற்போதைய ஜனாதிபதியாவார்.
எனவே அவர் மீது வழக்கு தொடர முடியாது என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலையிலான எழுவரடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் இந்த தீர்மானத்தை அறிவித்தது.
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் முக்கிய தேவாலயங்கள் மற்றும் உயர்தர விருந்தினர் விடுதிகளை இலக்குவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி வகித்து வந்திருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், பிரதிவாதிகளில் ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000.
Related posts:
|
|