ஏப்ரல் 21 தாக்குதல் – மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு!

Friday, March 12th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 அத்தியாயங்கள் இதற்கு முன்னரல் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே சட்டமா அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் மிகுதி 22 அத்தியாயங்களும் இன்று கைளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: