ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விஷேட அறிவிறுத்தல்.!

Saturday, June 22nd, 2019

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 9 காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவிறுத்தல், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட விசாரணைப் பிரிவு என்பனவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் 3 பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் உட்பட 9 காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா நேற்று அறிவுறுத்தல் விடுத்தார்.

பதில் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரட்னவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த அறிவுறுத்தல், பதில் காவல்துறைமா அதிபரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட விசாரணைப் பிரிவு என்பனவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: