ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, June 11th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவுக்கு உதவியமை, அடிப்படைவாத சிந்தனையை பரப்பியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகரியாவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய உதவி தபாலதிபர் ஒருவரும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 35 வயதுடைய கைதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts: