ஏப்ரல் 21 தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அவர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்..
அதேவேளை தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் என குறிப்பிட்ட அமைச்சர், இந்த விடயத்தில் இறுதி தீர்மானம் நீதித்துறையினால் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|