ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !

Friday, January 29th, 2021

ஏப்ரல் 21  மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுல் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப்பேரவைக்கான வரைபுச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக வடக்குச் சம...
தீவகத்தின் மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு எதிரா...
பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியார...