ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமற்றவகையில் தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் நாமல் உறுதி!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நிரோஷன் பெர்ணான்டோவின் உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில் –
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக எதிரணியினருக்கு தற்போது இருக்கும் அக்கறை, அன்றே இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. அத்டதுடன்எதிரணியை சேர்ந்தவர்கள் தான் கொழும்பு பேராயரை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதனை எதிரணியினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எமது அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி தற்போது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைவரும் எந்தவொரு வேறுபாடும் இன்று தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது எமது பொறுப்பாகும். இதற்கு எதிரணியினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பேராயரை விமர்சித்தவர்களை கூட, எதிரணியினர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவந்துள்ளார்கள். நாம் அவ்வாறு செயற்படவில்லை.
எனவே, இந்த விடயத்தில் எமது அரசாங்கத்தை சந்தேகம் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|