ஏப்ரல் 21 தாக்குதலிற்கு இன்றுடன் 3 மாதங்கள்

Sunday, July 21st, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இச் சம்பவத்தில் உயிரிழந்த 201 பேருக்கு 20 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்களில் 503 காயங்களுக்கு உள்ளானதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இவர்களில் 442 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட 43 வெளிநாட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இதுவரையில் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இத் தாக்குதல் சம்பவத்தினால் சேதமடைந்த தேவாலயங்களை மீள புனரமைப்பதற்காக இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: