ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் – இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்  என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

”எதிர்வரும் 2 ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

எனவே, 2 ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும்.

எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: