ஏப்ரல் 1: ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்கள் – யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரை தொடரும்!

யாழ்ப்பாணம் , கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
Related posts:
பெல்ஜியம் தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கவலை!
பருவமழை உரியகாலத்திற்கு முன் ஆரம்பிக்கலாம- வளிமண்டலவியல் திணைக்களம்!
தகுதியற்றவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை - கல்வியமைச்சர்!
|
|