ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சிறப்பு அங்காடிகள், சதோச மற்றும் கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் இந்த விலையில் அரிசியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கும் குறித்த வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய 4 ஆயிரம் வர்த்தக நிலையங்களின் ஊடாக அரிசியை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|